முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 937.98 மில்லியன் ரூபாய் நிதி உதவி..
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 11 அமைச்சுக்கள் ஊடாக 2684 திட்டங்களுக்காக 937.98 மில் லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலா் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறி யுள்ளாா்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய மாவட்ட செயலா் மேற்கண்டவாறு கூறி யுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக இந்த ஆண்டில் பதினொரு அமைச்சுக்களினூடாக 2684 அபிவிருத்தி திட்டங்களுக்கு 937.98 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்று அதன் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு சில வேலைத்திட்டங்கள் தற்போதுதான் கிடைத்தமையால் அது தொடர்பான அபிவிருத்தியை முன்னெடுப்பதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போரினாலும் ஆழிப்பேரலையினாலும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு இறுதிக் காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நிதியீட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற போதும்,
அதிக தேவைகள் காணப்படுகின்ற ஒரு மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.