"தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கி இருந்து ஓர் உரிமை குரல்" யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor

1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடாத் திவரும் மலையக தோட்ட மக்களுக்கு ஆதரவாக இ ன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நட த்தப்பட்டுள்ளது.

யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இப் போராட்டம் சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்ப்பாட்டில் "தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கி இருந்து ஓர் உரிமை குரல்" என்ற தொணிப் பொருளின் நடாத்தப்பட்டது. 

இன்று காலை பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும். தோட்ட தொழிலாளர் கம்பணிகளுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.


Radio
×