SuperTopAds

இலங்கையின் தாமதத்தால் சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

ஆசிரியர் - Editor II
இலங்கையின் தாமதத்தால் சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பொறுப்புக்கூறலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் 30 - 1 யோசனைக்கு இணை அனுசரணை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாமதம் காரணமாக, உண்மை மற்றும் காணாமல் போனோர் விடயம் உட்பட பொறுப்புக் கூறலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபை கூறியுள்ளது