SuperTopAds

வெளிநாடு ஒன்றிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கை தமிழ் இளைஞன்

ஆசிரியர் - Editor II
வெளிநாடு ஒன்றிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கை தமிழ் இளைஞன்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பிற்கான மனுவை மதிப்பீடு செய்யாமல் முதல் முறையாக ராஜா என்ற இலங்கைத் தமிழ் இளைஞன் நாடு கடத்தப்படவுள்ளார்.

தான் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து எனவும், தன்னை நாடு கடத்த வேண்டாம் என கூறியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும் அவரை உடனடியாக நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ராஜாவை நாடு கடத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய Villawood தடுப்பு முகாமில் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்றையதினத்திற்குள் அவுஸ்திரேலிய விமானம் மூலம் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

அவர் சிங்கப்பூர் வழியாக கொழும்பிற்கு திரும்புவார் என நம்பப்படுகிறது.

நாடு கடத்தப்படும் புகலிட கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அரசாங்கத்தின் துன்புறுத்தல் காரணமாக 2012 ஆம் ஆண்டு தஞ்சம் கோரிய ராஜா படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

விடுதலை புலிகளுடன் தொடர்புப்பட்டுள்ளார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக ராஜாவின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடம் கோருவோர் அனைவரும் இந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படாதென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் Peter Dutton அறிவித்திருந்தார்.

போலி புகலிடம் கோருவோர் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடம் கோருவோர் பாதுகாப்பு தொடர்பான தகவலை வழங்க வேண்டும், அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், பின்னர் அவர்கள் அகதிகளாக இருப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில நாளேட்டில் 41 பக்க விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய ராஜா போராடியுள்ளார்., காலக்கெடுவிற்கு முன் சட்ட உதவியை அணுக அவரால் முடியவில்லை. 7 ஆயிரம் புகலிடம் கோருவோர் காலக்கெடுவை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களில் 71வது நபராக ராஜா காணப்பட்டுள்ளார்.

காலக்கெடு முடிந்தும் அவரால் சட்ட உதவியை பெற முடியாமையினால் இன்றைய தினம் அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.