லண்டனில் வடக்கு ஆளுனருக்கு எதிர்ப்பு - புலம்பெயர் செயற்பாடாளர் கைது!

ஆசிரியர் - Admin
லண்டனில் வடக்கு ஆளுனருக்கு எதிர்ப்பு - புலம்பெயர் செயற்பாடாளர் கைது!

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே லண்டனில் தமிழ் மக்களுடன் நடத்த திட்டமிட்ட சந்திப்புகள் தமிழ்மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. 

எனினும், அதற்குப் பதிலாக வேறு இடங்களில் சந்திப்புக்களை நடத்த ரெஜினோல்ட் குரே தரப்பு தீவிரமாக முயன்றது. இதனால் மேற்கு லண்டனில் ஒரு இடமும் மத்திய லண்டனில் இன்னொரு இடமும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்கு எதிராக தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதனால் அந்த சந்திப்பும் பிசுபிசுத்துப் போனது. இதனையடுத்து பெருமளவிலான காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கட்டுப்படுத்த முனைந்தனர். கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு