குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா..! தோல்வியிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ்…!!
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த குஜராத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இந்த தேர்தல் மோடியின் செல்வாக்குக்கு அக்னி பரிட்சையாக இருந்தது.
னுஎனவே இந்த தேர்தலை இந்தியாவை உற்று நோக்க வைத்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆரம்பத்தில் பா.ஜனதா முன்னிலை பெற்று இருந்தது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சி முந்த தொடங்கியது.
இதனால் பா.ஜ தலைவர்கள் முகத்தில் கவலை ரேகை படர தொடங்கியது. காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் முடிவுகள் மாற தொடங்கியது. மீண்டும் பா.ஜனதா முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் 73 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி 182 தொகுதிகளில் பா.ஜனதா அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
ஆனாலும் கடந்த முறை வென்றதை காட்டிலும் 8 தொகுதிகளை இழக்கிறது. ஆனால் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 12 தொகுதிகளை அதிகம் பெற்றுள்ளது. அதன்மூலம் தோல்வியிலும் காங்கிரஸ் ஒரு வெற்றியை சுவைத்துள்ளது.