எந்த விதத்திலும் இலங்கைக்கு உதவுவோம் ; மைத்திரிக்கு மோடி உறுதி

ஆசிரியர் - Admin
எந்த விதத்திலும் இலங்கைக்கு உதவுவோம் ; மைத்திரிக்கு மோடி உறுதி

இலங்கைக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

காத்மண்டுவில் நேற்று இந்தியப் பிரதமரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும்,அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்தனர் என்று இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோஹலே தெரிவித்தார்.

“இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு நாங்கள் உதவுவோம் என்பதை உறுதிப்படுத்த இந்தியா முழுமையான கடமைப்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் கூறினார்.

இலங்கையின் அபிவிருத்தியை, பிராந்தியத்தில் பரஸ்பர நன்மைக்காக இந்தியாவின் பங்களிப்பாக பார்க்க நாம் விரும்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு