SuperTopAds

வடிவேலுவின் மகனை திருமணம் செய்துக்கொண்டுள்ள பெண் தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

ஆசிரியர் - Editor II
வடிவேலுவின் மகனை திருமணம் செய்துக்கொண்டுள்ள பெண் தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வடிவேலுவின் மகனை திருமணம் செய்துள்ள பெண் யார் தெரியுமா..! நினைத்ததை சாதித்தார்…!!

வடிவேலு என்றால் பிடிக்காத யாரும் இருக்கமாட்டார்கள். இவர் தமிழ் சினிமாவின் உச்ச நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் சினிமாவில் நடித்து பணம், புகழ் என அனைத்தையும் வேண்டும் அளவுக்கு சேர்த்து விட்டார்.

தற்போது 24ம் புலிகேசி படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மகன் சுப்பிரமணியின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.

பொதுவாக எல்லோருமே தன்னுடைய மகன் திருமணம் செய்து கொள்ளும் பெண் வசதியான இடத்தில் இருந்து வரவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் வடிவேலுவோ, தனக்கு வரப்போகும் மருமகள் குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி குடிசை வீட்டில் வசித்த பெண்ணையே தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அந்த பெண்ணின் பெயர் புவனேஸ்வரி. அவரது தந்தை பந்தல் அமைக்கும் சாதாரண கூலி தொழிலாளி.

இவர்களது திருமணம் மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் எளிமையாக நடந்தது.

இதில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் பெண்ணிடம் வரதட்சணையாக பணம், பொருள் எதையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது