இலங்கையர்களால் பிரித்தானியாவில் பிரபல சுப்பர் மார்க்கட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு இணைந்தமையினால் பிரித்தானியாவில் பிரபல சுப்பர் மார்கட் ஒன்று மதுபானம் விற்பனை செய்யும் உரிமத்தை இழந்துள்ளது.
பிரித்தானியாவின் Oxford வீதியிலுள்ள Best Foods என்ற சுப்பர் மார்க்கட்டே இவ்வாறு மதுபான விற்பனை உரிமையை இழந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத பணியாளர் இருவர் குறித்த அங்கு பணியாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருநகர் ஆணைக்குழுவின் உரிமம் தொடர்பான குழுவொன்று திடீர் விஜயம் மேற்கொண்டு சோதனை நடத்தியது.
இதன்போது, குறித்த மார்க்கட்டின் ஊழியர்கள் அங்கீகாரம் இல்லாத மதுபானத்தை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உணவகத்திலிருந்த அனைத்து மதுபானங்களையும் நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மார்க்கட்டின் இறைச்சி விற்பனை பிரிவல் சட்டவிரோத முறையில் இலங்கை பணியாளர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டமையை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு இதே இடத்தில் இரண்டு சட்டவிரோத இலங்கை பணியாளர்கள் பணியாற்றியதாக அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து பணிக்கு இணைக்கப்படுகின்றமையினால் Thames Valley பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது