SuperTopAds

நான் குளிப்பதை பார்த்துவிட்டார் ஆளுநர் புரோஹித்..? கடலூரில் பெண் பரபரப்பு புகார்

ஆசிரியர் - Editor II
நான் குளிப்பதை பார்த்துவிட்டார் ஆளுநர் புரோஹித்..? கடலூரில் பெண் பரபரப்பு புகார்

நான் குளிப்பதை பார்த்துவிட்டார் ஆளுநர் புரோஹித்..? கடலூரில் பெண் பரபரப்பு புகார்

தமிழகத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், திடீர் திடீரென பல மாவடங்களில் சோதனை நடத்தி வருகிறார்.

அண்மையில் கன்னியாகுமரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆய்வு செய்தார்.

ஆனால் ஆய்வுக்கு பிறகு எந்த தகவலும் தெரிவிக்காததால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று கடலூரில் பன்வாரிலால் ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது வண்டிப்பாளையம் அருகே ஆய்வு செய்த போது ஒரு பெண் கீற்று மறைப்பில் குளித்துகொண்டிருந்தார்.

இதை அறியாமல் உள்ளே புகுந்து ஆளுநர் ஆய்வு செய்த போது அந்த பெண் ஆளுநரை பார்த்து பயந்துபோய் அலறியுள்ளார்.

இளம்பெண்ணின் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் ஆளுநரை போலீசார் பாதுக்காப்பாக அங்கிருந்து அழைத்து வந்துள்ளனர்.

தாம் குளிப்பதை ஆளுநர் பாத்த்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

ஆளுநரின் ஆய்வுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தற்போது இந்த பெண்ணின் புகாரால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.