டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு;ரத்த சிவப்பாக மாறிய கடல்

ஆசிரியர் - Admin
டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு;ரத்த சிவப்பாக மாறிய கடல்

டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது.

முதலில் இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். அங்கிருந்து திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வருகின்றனர்.

பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தியால் வெட்டிக் கொல்கின்றனர்.

5 வயது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களை கொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி 16-ம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்கள் அதை கண்டு கொள்வதில்லை. ஆண்டுதோறும் திருவிழாவாக நடத்தி மகிழ்கின்றனர்.

திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் இதன் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம் கடலில் கலந்து நீர் சிவப்பாக மாறியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு