SuperTopAds

படகுகளில் வருபவர்களை விமானம் மூலம் அனுப்பும் செயற்றிட்டம் நடக்கிறதா?

ஆசிரியர் - Editor I
படகுகளில் வருபவர்களை விமானம் மூலம் அனுப்பும் செயற்றிட்டம் நடக்கிறதா?

படகேறி வரும் இந்தியர்களை  விமானம் ஏற்றி தாயகம் அனுப்பும் செயல்பாட்டினை மேற்கோள் கும் புதிய வேலைத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு முன்னெடுக்கின்றதா .

 என்று எண்ணத் தோன்றுகின்றது. என  மாதகல் மேற்கு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் விநாயமூர்த்தி -  சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாதகல் மேற்கு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

2018ம் ஆண்டின் 2ம் இலக்க திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பு குறைந்த்து 3 அல்லது 4 மாதங்கள் ஏனும்   இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். 

அது ஓர் சிறிய அச்சமாக இந்திய மீனவர்களிற்கு இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பளிக்கும்போது உடனடியாகவே விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

எந்தவொரு குற்றப்பணமும் கிடையாது. ஒத்தி வைக்கப்பட்ட காலத்திற்குள் மீண்டும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தால் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 

இது இந்திய மீனவர்களிற்கு மேலும் ஆர்வத்தை அதிகரிக்குமோ என்ற அச்சமே எம்மிடத்தில் உள்ளது. 

அதாவது விமானத்தில் இலவசமாக பயணிக்க விரும்பும் மீனவர் படகில் எல்லை தாண்டினால் சில நாட்களில் விமானத்தில் போகலாம் என இந்திய மீனவர்கள் எண்ணினால் இங்கு வரும் மீனவர்கள் தொகையை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி உண்டு. 

ஏனெனில் மீனவர்கள் தொழில் புரியும் படகுகள் அதிகமாக அவர்களிற்கு சொந்தமானது கிடையாது . அதன் உரிமையாளர் பெரும் முதலாளியாகவே இருப்பார். எனவே கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிற்கு கண்டிப்பாக குற்றப்பணம் விதிக்க வேண்டும் என அமைச்சை கோரவுள்ளோம் . 

அதற்காக இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு மில்லியன் கணக்கிலோ அல்லது லட்சக் கணக்கிலோ அறவிட வேண்டும் என்றும் அல்ல. குறைந்த்து 50 ஆயிரம் ரூபா வீதம் முதல் தடவையாக குற்றப் பணம் விதிக்கும்போது அங்கே பல கேள்விகள் எழும் காலம் தாமதம் அடையும். 

அதனால் ஊடுருவலும் தடுக்கப்படும். இவ்வாறு இல்லாது விடின் படகில் வருபவர்களிற்கு விமான நிலையம் சென்று கை அசைத்து வழியனுப்பும் செயல்பாட்டை செய்வதாகவே உள்ளுர் மீனவர்களின் நிலமை விரைவில் ஏற்படும். 

இதேவேளை படகுகள் தொடர்பிலும் என்ன நிலமை என்பது தொடர்பில் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இதனால் உள்ளூர் மீனவர்கள் கொதி நிலையில் 

உள்ளதோடு இந்திய மீனவர்கள் எம்மை ஏளனம் செய்யும் நிலமையினையே எமது அரசாங்கம் தோற்றிவித்துள்ளது என்பதனை வெட்கத்துடன் தெரிவித்தே ஆகவேண்டிய சூழலில் உள்ளோம் . என்றார்.