இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த 16 இந்திய மீனவர்கள் நாடு கடத்தப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த 16 இந்திய மீனவர்கள் நாடு கடத்தப்பட்டனர்..

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி படகில் வந்த மீனவர்கள் 20நாட்களில் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இம்மாதம்  5 மற்றும் 6ந் தேதிகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் நெடுந்தீவு  கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  16 மீனவர்களையும் ஊர்காவற்றுறை  நீதிமன்றம்  குற்றவாளிகள் என அறிவித்து ஐந்து ஆண்டுகள்  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 2 ஆண்டு  சிறை தண்டனை  

அளித்து உத்தரவிட்டதோடு குடிவரவு குடியகல்வு திணைக்கள  அதிகாரிகள் ஊடாக நாடுகடத்த உத்தரவிடப்பட்டது. இதேநேரம் கடந்த  16ந் தேதி    மிதவையில் மீன் பிடியில் ஈடுபட்ட சமயம்  கடல் 

காற்றின் வேகத்தால் கச்சத்தீவில் தஞ்சம்  அடைந்த  இரண்டு தனுஸ்கோடி பகுதி மீனவர்களும் உள்ளடங்கலாக  இன்று  18 இந்திய மீனவர்களும் மீரியான  முகாமில்  இருந்து   விமானம் மூலம் மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு