பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முதல் வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வாக்கெடுப்பு இடம்பெறும் ஸ்வாபி நகரில் பிரதான அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற வன்முறையில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தனது பாராளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்களை இன்று எதிர் கொள்கின்றது.
இவற்றில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
இந்தத் தேர்தல்களுக்காக 85 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பாராளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களுக்காக 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பாதுகாப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தல்களில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதில் தாம் முதல் தடவையாக பிரதமராகும் வாய்ப்புள்ளதாக இம்ரான்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.