சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் - நவாஸ் ஷெரீப் மகள் மரியம்
ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மருமகன் மரியம் நவாஸுக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளனர்.
ஆனால் நான் தந்தையையும் கணவரையும் விட்டுவிட்டு இந்த சிறையில் இருந்து வெளியேற மாட்டேன் என மரியம் கூறியுள்ளார்.