SuperTopAds

ரஷ்யா-இந்தியா போர் ஜெட் விமான உற்பத்தியில் பின்னடைவு-வெளியேறுகிறதா இந்தியா?

ஆசிரியர் - Editor II
ரஷ்யா-இந்தியா போர் ஜெட் விமான உற்பத்தியில் பின்னடைவு-வெளியேறுகிறதா இந்தியா?

ரஷ்யா உடன் இணைந்து 5-ம் தலைமறை போர் ஜெட் விமானத்தினை உருவாக்க முடிவு செய்து இருந்த நிலையில் பொருட் செலவினை கணக்கில் கொண்டு இந்தியா மறு பரிசீலனை செய்ய இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

உலகளவில் மிகப் பெரிய இணைவாக இது பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றத்தினை அளித்து வருகிறது.

கூட்டு

இந்தியா, ரஷ்யா இடையில் இரண்டு நாட்டு ராணுவமும் இணைந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்வது, மற்றும் கூட்டாகத் தொழில்நுட்பத்தினைப் பகிர்ந்து ஜெட் விமானங்களை உருவாக்குவது என்பதற்காக 2007-ம் ஆண்டே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுக் கடந்த 11 வருடங்களாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.

மதிப்பு

இரண்டு நாடுகளும் இணைந்து போர் ஜெட் விமானங்கள் உருவாக்க 2 லட்சம் கோடி ரூபாயினை முதலீடு செய்ய இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பணம்

இந்திய அரசு ஜெட் விமான உற்பத்தி திட்டத்தினை மறு பரிசீலனை செய்ய முக்கியக் காரணம் பணம் தான் என்றும் அதனை ரஷ்யா உடன் முன்பே தெரிவித்தும் அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இரகசிய தொழில்நுட்பங்கள்

இந்தியா - ரஷ்யா கூட்டாக இந்தப் போர் ஜெட் விமானங்களைத் தயாரிக்க முடிவு செய்து இருப்பினும் இருவருக்கும் சரி சமமான உரிமைகள் இருக்கும் என்று கூறப்பட்டும், தொழில்நுட்பத்தின் முக்கிய இரகசியங்களைப் பகிர முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதும் ஒரு காரணம் என்று டெல்லியில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பேச்சுவார்த்தை

முக்கியத் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியாவுடன் விவரங்களைப் பகிர வேண்டும் என்று பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை இரண்டு நாடுகளின் அரசுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ளது. 2016-ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பார்க்கர் தலைமையில் கூட இரண்டு நாடுகள் இடையில் மறு பரிசீலனை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்துஸ்தான் ஏரோனட்டிக்கல்ஸ் லிமிட்டட்

அரசு தரப்பு இந்தத் திட்டத்தினை மறு பரிசீலனை செய்து வந்தாலும் இந்துஸ்தான ஏரோனட்டிக்கல் லிமிடட் நிறுவனம் இணையலாம் என்றே அவர்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இரண்டு நாடும் இணைந்து செயல்படும் போது இந்திய விண்வெளி துறை மிகப் பெரிய வளர்ச்சியினை எட்டும் என்றும் எந்த ஒரு நாடும் இது போன்ற முக்கிய இரகசியங்களைப் பகிராது என்றும் கூறுகிறது. விமானப் படை இந்திய விமானப் படை இந்தத் திட்டத்திற்கு அதிகச் செலவாகிறது என்பதால் மத்திய அரசுக்குப் பெரியதாக அழுத்தும் தெரிவிக்கவில்லை.