விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு $5000 கோடி டாலர் அபராதம்!
உலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் காரணமாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ஆண்ட்ராய்ட் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது
இந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. இதன்படி கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக $5000 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.3.42 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுளின் இந்த சட்டவிரோத செயல்பாடு இன்றிலிருந்து 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் மேலும் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.