13 பேரை காவுகொண்ட நிலப்பிரச்சினை!
மெக்சிகோவின் ஒக்ஷாகா மாநிலத்தில், 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தென் மெக்சிகோவிலுள்ள ஒக்ஷாகா மாநிலத்தின் சியரா பகுதியில், பல தசாப்தங்களாகத் தொடா்ந்து வந்த நிலப்பிரச்சினையின் விளைவாக நேற்று (செவ்வாய்க்கிழமை) சியாராவிற்கு சற்று தொலைவிலுள்ள குடியிருப்பாளா்கள் சிலா் ஒன்றிணைந்து 13 பேரைக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சன்டா மரியா எகடபெக் நகரைச் குறித்த 13 பேரையும் சென் லூகஸ் எக்ஸ்கோடபெக் குடியிருப்புவாசிகளே கொலைசெய்துள்ளனர் என ஒக்ஷாகா மாநில சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவா்களுக்கிடையே நிலப்பிரச்சனை நீடித்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், குறிப்பிட்டளவு தூரத்திற்கு அப்பால் பதுங்கியிருந்து இந்தக் கொலையை செய்துள்ளதாகவும் ஒக்ஷாகா மாநில சட்டமா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இக்கொடூரக் கொலை சம்பவத்தினைத் தொடர்ந்து ஒக்ஷாகா மாநில பொலிஸார், தங்கள் மாநிலத்தில் சட்ட ஒழுங்கினைப் பேணும் பொறுப்பும் கடமையும் தமக்குள்ளதெனவும் அதனை சரிவர அமுல்படுத்தும் வகையில் செயற்பட போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் வெளிநாட்டு செய்திகளுக்கு முத்தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்