மக்களை கொல்லும் வெயில்;ஜப்பானில் 14 பேர் உயிரிழப்பு
உலக நாடுகளுடன் தனது வணிக ரீதியிலான போட்டியில் முதன்மையாக விளங்கும் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும்இ பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஜப்பான் ராணுவத்துடன் மக்களும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.