சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறையில் 1000 நாட்கள்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளாரென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின்போது, அவர் கழித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியன்று, அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான விளக்கமறியலில் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இன்றுடன் 1,000 நாள்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.