பிரித்தானியாவில் அரசியல் நெருக்கடி அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவிவிலகல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிக்கொள்ளும் பிரெக்சிற் நடவடிக்கையை மையப்படுத்தி கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்.
இதனால் தற்போது பிரதமர் திரேசாமே கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறார். இந்த அரசியல்நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால் விரைவில் பிரித்தானியா பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படக்கூடும்
கடந்தவாரம் பிரக்சிற் தொடர்பான தனது அமைச்சரவையின் ஆதரவை பிரதமர் தெரசா மே பெற்றிருந்தபோதிலும் அவரது புதிய பிரெக்சிற் மென்மையான பிரெக்சிற் என கருதப்பட்டது.
இதனால் இறுக்கமான பிரெக்சிற் நகர்வை விரும்பும் பொறிஸ் ஜோன்சன் போன்றவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.
இதனையடுத்து பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் நேற்று தனது பதவியை துறந்தார். இதன்பின்னர் பிரக்சிற் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான புதிய அமைச்சராக டொமினிக் ராப் இன்று காலை அவசரமாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் தெரசாமே நாடாளுமன்றத்தில் தனது புதிய பிரெக்சிற் திட்டங்களை பகிரங்கப்படுத்த இருப்பதற்கு அரை மணிநேரத்துக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனும் பதவி விலகியுள்ளார்.
இ;வவாறு முக்கிய அமைச்சரவை சகாக்கள் அடுத்தடுத்த பதவிலகுவதால் பிரதமர் திரேசா மே கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறார். எனினும் விரைவில் புதிய வெளிவிவகார அமைச்சர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.