SuperTopAds

ஜப்­பா­னில் கடும் மழை­- தத்தளிக்கும் மக்கள் -76 பேர் உயிரிழப்பு- மீட்புப் பணிகள் தீவிரம்!!

ஆசிரியர் - Editor II
ஜப்­பா­னில் கடும் மழை­- தத்தளிக்கும் மக்கள் -76 பேர் உயிரிழப்பு- மீட்புப் பணிகள் தீவிரம்!!

ஜப்­பா­னில் கடந்த சில நாள்­க­ளாக பெய்­து­வ­ரும் கடும் மழை­யால் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கில் சிக்கி 76 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­க­லாம் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது.

ஜப்­பா­னில் உள்ள ஹிரோ­ஷிமா, கியாட்டோ, ஒக்­கா­யாமா, எஹிமே உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளில் கடந்த சில தினங்­க­ளாக கன­மழை பெய்து வரு­கி­றது. வீதி­கள், குடி­யிருப்­புக்­கள் என்று எங்­கும் வெள்­ளக்­கா­டாக மாறி­யுள்­ளது. மழை வெள்­ளத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 76ஆக உள்­ளது.

இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என்று கோடிட்­டுக் காட்­டு­கின்­றன ஜப்­பான் ஊட­கங்­கள். மழை தொடர்ந்து பெய்து வரு­வ­தா­லும் வீதி­கள் வெள்­ளத்­தால் மூடப்­பட்­டுள்­ள­ தா­ லும் மீட்­புப் பணி­கள் மந்த கதி­யில் இடம்­பெற்று வரு­கின்­றன.

பட­கு­க­ளின் மூல­மா­க­வும், உலங்கு வானூர்­தி­ க­ளின் மூல­மா­க­வும் மட்­டுமே தற்­போது மீட்­புப் பணி­கள் இடம்­பெ­று­கின்­றன.