1,00,000 பேரை வெளியேற்ற துடிக்கும் டொனால்டு டிரம்ப்.. இந்தியர்கள் கண்ணீர்..!
அமெரிக்காவில் பணியாற்ற வரும் திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படும், ஏற்கனவே இதற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வரும் டிரம்ப் அரசு அடுத்தகட்டமாக ஹெச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்வர்களின் துணைக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உரிமையை ரத்துச் செய்யப் பிடிவாதமாக உள்ளது.
பல தடைகளைத் தாண்டி ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்யும் முடிவில் உறுதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப் அடுத்தச் சில மாதத்தில் இதனை முழுமையாக நிறைவேற்ற உள்ளதாகத் தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்தால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் மத்தியில் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழப்பது மட்டும் அல்லாமல் விசா வைத்துள்ளவர்கள் மத்தியில் அதிர்ப்தி நிலவும்.
டிரம்ப் திட்டத்தின் படி வேலைவாய்ப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டால், கணவன் அல்லது மனைவி தனிமைப்படுத்தப்படுவார்கள், உள்நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகும், குடும்பத்தில் நிதி நிலை அதிகளவில் பாதிக்கப்படும்.
அதேபோல் அமெரிக்காவில் வந்து வேலைசெய்ய விரும்போரின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்து வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்கும்.
இதுமட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு உரிமையைப் பெற்ற ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவிகள் வேலைவாய்ப்புகளை இழப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பையும் சந்திக்கும்.
அனைத்தையும் தாண்டி அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டால், வெளியேற்றப்படும் ஊழியர்கள் மூலம் நிறுவனங்களுக்கு 2,50,000 டாலர் முதல் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான பணிகளைத் தேக்கம் அடையும். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.
2015ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான அரசு ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் துணைக்கு வேலைவாய்ப்பு உரிமையை வழங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஹெச்1பி விசா பெற்றவர்களின் கணவன் அல்லது 95 சதவீதம் பேர் அதிகளவிலான கல்வி திறன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் நாட்டில் பல முன்னேற்றங்கள் அடைய முடியும் எனத் திட்டமிட்டு உரிமை வழங்கப்பட்டது.
ஆனால் இன்று ஹெச்1பி விசா மற்றும் வேலைவாய்ப்பு உரிமை வாயிலாகவே பல லட்சம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இதனால் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என டிரம்ப் அரசு குற்றம்சாட்டுகிறது.