SuperTopAds

49 பேர் பலி, 50 பேர் காணவில்லை, 16 லட்சம் பேர் வெளியேற்றம்.. ஜப்பானில் வரலாறு காணாத மழை!

ஆசிரியர் - Editor II
49 பேர் பலி, 50 பேர் காணவில்லை, 16 லட்சம் பேர் வெளியேற்றம்.. ஜப்பானில் வரலாறு காணாத மழை!

டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் மோசமான மழை காரணமாக மொத்தமாக 49 பேர் பாலியாகி உள்ளனர். ஜப்பானில் இன்றுடன் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. ஆனால் கடந்த ஒருவாரமாக அங்கு மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.

ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 49 பேர் பாலியாகி உள்ளனர். இதனால் மொத்தம் 50 பேர் காணவில்லை. 5000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அங்கு சுமார் 584 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும். இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 16 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 31 லட்சம் பேர் வெளியேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.