SuperTopAds

நவாஸ் ஷெரீப் மற்றும் மகளுக்கு சிறைத்தண்டனை- பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!!

ஆசிரியர் - Editor II
நவாஸ் ஷெரீப் மற்றும் மகளுக்கு சிறைத்தண்டனை- பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!!

பாகிஸ்தானின் முன்னாள் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

லண்டனில் நான்கு சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பணாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு தலைமை அமைச்சர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனின் அவன்பீல்டு என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தானின் கடந்த காலத்தில், பர்வேஸ் முஷாரப் ஆட்சியை கவிழ்த்தபோது, நவாஸ் ஷெரீப் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதுடன், நாட்டை விட்டும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.