SuperTopAds

வாங்க.. நாமெல்லாம் செத்துப் போவோம்... ஐரோப்பாவையே உலுக்கிய கூட்டான தற்கொலைகள் !

ஆசிரியர் - Editor II
வாங்க.. நாமெல்லாம் செத்துப் போவோம்... ஐரோப்பாவையே உலுக்கிய கூட்டான தற்கொலைகள் !

"நான் தான் நைட்ஸ் டெம்ப்ளார். நாம் அனைவரும் சேர்ந்து மரணத்தைத் தழுவுவோம்" "அப்படி செய்தால் என்ன நடக்கும்..?" "நமக்கு இந்த உலகம் வேண்டாம். இது பாவிகளின் உலகம். இங்கு பாவங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. நாம் நல்லவர்கள். வேறு உலகுக்கு உரியவர்கள்" "அந்த வேற்றுலகம் எங்கிருக்கிறது?"

"அதை நான் காட்டுகிறேன். அனைவரும் சேர்ந்து இந்த உலகை நீப்போம்.. நமக்கான உலகம் செல்வோம்" "அதற்காக காத்திருக்கிறோம்..." யார் இந்த டெம்ப்ளார்? இவர் ஏன் மரணத்தை ரசிக்க வேண்டும்..? 14வது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மதகுருதான் டெம்ப்ளார். தன்னை டெம்ப்ளாராக வரித்துக் கொண்டு மக்களிடையே அறிமுகமானவர் மேலே பேசிய ஜோசப் டி மாம்ப்ரோ. இவர் உருவாக்கிய அமைப்புதான் ஆர்டர் ஆப் தி சோலார் டெம்பிள். நான் மனித குலத்தை மீட்க வந்தவன். என்னுடன் வாருங்கள். சேர்ந்து மாற்று உலகுக்கு, நமக்கான உலகுக்கு பயணிப்போம் என்று கூறி மக்களை மூளைச் சலவை செய்து வந்தவர்.

1994ம் ஆண்டு அந்த உக்கிரச் சம்பவம் நடந்தேறியது. சுவிட்சர்லாந்தில் 2 இடங்களில் 48 பேர் கூடி தற்கொலை செய்து கொண்டனர். அனைவருமே மாம்ப்ரோவின் அழைப்பை ஏற்று உயிரை விட்டனர். இதற்குத் தலைமை தாங்கியவர் லூக் ஜோரட். இவர் இந்த மூட நம்பிக்கை அமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர். அது ஒரு கோரமான தற்கொலை. மொத்தமாக 48 உடல்களை போலீஸார் மீட்டனர். பிரிட்பார்க் பண்ணை வீட்டில் 23 பேர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கூண்டோடு அனைவரும் தீக்குளித்து உயிரிழந்திருந்தனர். அதேபோல கான்டான் ஆப் வாலாய்ஸ் என்ற இடத்தில் 25 பேர் பிணமாகக் கிடந்தனர். அனைவருமே ஒரே மாதிரியான உடை அணிந்து தற்கொலை செய்திருந்தனர். அந்த இடங்கள் போர்க்களம் போல காணப்பட்டது. மரணத்தின் வாடையை சுவிட்சர்லாந்தே பார்த்து அதிர்ந்தது. இந்தக் கும்பலின் மரண ஓலம் இத்தோடு நிற்கவில்லை. 1995ல் கனடாவின் கியூபெக்கில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 1994 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்த அமைப்பைச் சேர்ந்த 74 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.