ரஸ்யா பிரித்தானியா முறுகல் ஒரு யுத்தத்தை நோக்கி இடடுச்செல்லுமா?
ரஸ்யாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தும்படியான மற்றொரு சம்பவம் லன்டனில் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் வசித்த முன்னாள் ரஸ்ய உளவாளி மற்றும் அவரது மகள் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் அதி கொடிய இரசாயனவூட்டல் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
இப்போது இன்னொரு மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் சடுதியாக மயக்கடைந்து உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பிரித்தானியாவின்,பயங்கரவாத தடுப்புபிரிபு அவசர விசாரணைகளை முடுக்கியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரகால குழுவான கோப்ராவும் அவசரமாகக் கூடி இந்த விடயம் குறித்து ஆய்வு செய்துள்ளது
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தாக்குதலுக்கு ரஸ்யாவே காரணமென பிரித்தானிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியதை அடுத்து இரண்டு தரப்புக்கு இடையே கடுமையான ராஜதந்திர முறுகல் நிலை எழுந்திருந்து.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் இரசாயனத் தாக்குதல் நடத்தப்;பட்ட சலிஸ்பெரி பகுதியில் இருந்த எட்டு மைல் தூரத்தில் உள்ள அமெஸ்பெரி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதுகளில் இருந்த ஆணும் பெண்ணும் வாயில் நுரைதள்ளியபடி சடுதியாக நிலைகுலைந்து மயக்கமடைந்துள்ளனர்.
இதனால் இதுவும் ரஸ்யாவின் இரசாயனத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
தற்போது மேற்படி இருவர் வசித்த வீடும் அதன் சுற்றாடலும் காவற்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.