பாம்புத் தீவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
உலகப் பாரம்பரியச் சின்னமாக சீனாவின் பாம்புத் தீவை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
போஹாய் (Bohai) கடல் பகுதியில் டாலியன் நகரம் என்ற (Dalian city) பாம்புத் தீவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அதிக விஷம் கொண்ட அபூர்வ விரியன் வகைப் பாம்புகள் உள்ளன.
மேலும் பாம்புகளை உண்பதற்கு அரிய வகை கறுப்பு வால் கடல் புறாக்களும் இந்தத் தீவில் வாழ்கின்றன.
அத்துடன் உலகில் எங்குமில்லாத 730 வகைத் தாவரங்கள் டாலியன் நகரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர இரு வாழ்விகள், 10 ற்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள் இந்தத் தீவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.