SuperTopAds

அமெரிக்க அதிபர் தென் கொரியா வருகை: - வட கொரியா ஆத்திரம்..!

ஆசிரியர் - Editor I
அமெரிக்க அதிபர் தென் கொரியா வருகை: - வட கொரியா ஆத்திரம்..!

வடகொரியா தொடர்ந்து அணுஆயுத மிரட்டல் விடுத்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தென்கொரியா சென்றடைந்தார். ட்ரம்பின் வருகையால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 

மனைவியுடன் சியோலில் உள்ள ஓசான் விமானப் படைதளத்தில் வந்திறங்கிய ட்ரம்பை, தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டின் உயரதிகாரிகள் வரவேற்றனர். தென்கொரிய ராணுவத்தினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தென்கொரியாவின் உற்சாக வரவேற்பை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார்.

சியோலில் ஒருநாள் தங்க உள்ள ட்ரம்ப் வடகொரிய பிரச்சனை குறித்து, தென்கொரிய அதிபருடன் முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார். ட்ரம்பின் தென்கொரிய வருகையால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, ஏதாவது ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடலாம் என தெரிகிறது. 

ஆசிய நாடுகளில் 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு தென்கொரியாவிற்கு வந்துள்ளார். ஜப்பானில் இருந்தபோது வட கொரியா அனுப்பும் ஏவுகணைகளை ஜப்பான் சுட்டு விழ்த்த ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார். 

ட்ரம்ப்பின் இந்த கருத்தும் வட கொரியாவை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது. இந்நிலையில் தென் கொரியா வந்த ட்ரம்ப், விமான படை தளத்திலிருந்து வடகொரிய எல்லை அருகே இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.