ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடும்போக்கான குடியேற்ற கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க எல்லையில் பிரித்துவைக்கப்பட்டுள்ள குடும்பங்களை மீளிணைக்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பிரித்துவைக்கும் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட சுமார் 2 ஆயிரம் சிறுவர்கள் தொடர்ந்தும் பெற்றோரிடம் இருந்து பிரித்துவைக்கப்பட்டுள்ளனர்.
வொஷிங்டன், நியூயோர்க் மற்றும் ஏனைய பல நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குடும்பங்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய குடியேற்ற மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகயை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.