SuperTopAds

கார் கழுவ பிரித்தானியாவில் தடை! கடும்வெப்பத்தால் நீருக்கு கட்டுப்பாடு.

ஆசிரியர் - Editor II
கார் கழுவ பிரித்தானியாவில் தடை! கடும்வெப்பத்தால் நீருக்கு கட்டுப்பாடு.

ஆபிரிக்க கண்டம் மற்றும் ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் இருந்து வந்த கடும் வெப்பக்காற்று காரணமாக பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பரவலாக 30 பாகைக்கு மேல் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இந்த வாரஇறுதியில் சூரிய ஒளி அதியுச்சம்பெறுவதால் இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கவுள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை கடும்வெப்பநிலைகாரணமாக அதன் மேற்குப் பிராந்தியத்தில் கடுமையான மின்னல் மற்றும் இடிமுழக்கம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் ஏற்படுத்தும் வரட்சிகாரணமாக ஐக்கிய ராஜ்யத்தின் வடஅயர்லாந்து பகுதியில் இன்று மாலை ஆறு மணிமுதல் “ஹோர்ஸ் பைப் தடை”எனப்படும் நீர்க்கட்டு;ப்பாடு நடைமுறைக்கு வருகிறது.

இதனால் வாகனங்களைக் கழுவுவது, தோட்டங்களுக்கு நீர்வீசுறுவது மற்றும் நீச்சல் குளங்களுக்கு நீர் நிரப்பும் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. இதனை விட வீடுகளின் நீர்பாவனைக்கும் சில கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. வடஅயர்லாந்தைப்பொறுத்தவரை இறுதியாக 1995இல் தான் இவ்வாறான தடைகொண்டுவரப்பட்டிருந்தது.

இதேவேளை அதிகவெப்பமும் வரட்சிநிலையும் தொடர்ந்தால் இங்கிலாந்து பிராந்தியத்திலும் இவ்வாறான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்;படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.