SuperTopAds

12 பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஆசிரியர் - Editor II
12 பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்ட பின்னர் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக  கொலைவெறி தாக்குதல்களில் தொடர்புடையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுப்படுத்துமாறும்  மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொல்லுமாறும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி சமீபத்தில் உத்தரவிட்டார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 8 பேர் சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்ற சிறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில்  இவர்களில் 12 பேர் நேற்று (வியாழக்கிழமை) தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

ஈராக் சிறைகளில் 100 வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 300 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.