SuperTopAds

24 பெண்களை திருமணம் செய்த மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் - Editor II
24 பெண்களை திருமணம் செய்த மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றேடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கனடா நாட்டில் பலதார திருமணங்களுக்கு தடை உள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இதுசம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டால் அதற்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 61 வயது நபர் ஒருவர் 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது பெயர் வின்ஸ்டென்ட் பிளாக்மோர். இவர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராக இருந்து வருகிறார்.

இவர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்தவர்களில் பலர் 15 வயதுடைய சிறுமிகள்.

24 மனைவிகள் மூலம் அவருக்கு 149 குழந்தைகள் உள்ளனர். பலதார திருமணம் தொடர்பாக அவர் மீது பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல ஜேம்ஸ்ஒலர் என்பவர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவரை 3 மாதம் வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது.