SuperTopAds

ஜெருசலேம் விவகாரம்.., டிரம்பிற்கு எதிராக உலக நாடுகளில் வெடிக்கிறது போராட்டம் !!

ஆசிரியர் - Editor II
ஜெருசலேம் விவகாரம்.., டிரம்பிற்கு எதிராக உலக நாடுகளில் வெடிக்கிறது போராட்டம் !!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக துருக்கி,ஜோர்டான் உள்ளிட்ட பல நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.

நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன் விகவாரம் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது என்று கூறும் அளவிற்கு இரு நாடுகள் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

அத்துமீறி பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய யூதர்கள், பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை கைப்பற்றி அதனை தங்களுக்கென இஸ்ரேல் என்றே நாடையே உருவாக்கினர், மேலும் முஸ்லிம்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் ஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகர் என்றும் தங்களுக்கு தாங்களே சொல்லிக்கொண்டனர், இதனை பல நாடுகளும் ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

டிரம்ப் இவ்வாறு அறிவித்த அடுத்த சில மணிநேரத்தில் வளைகுடா நாடுகள் பலவற்றிலும் போராட்டம் வெடித்தன.

அரபு நாடுகள் மட்டுமின்றி பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளும் டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டிரம்பின் தன்னிச்சையான இந்த அறிவிப்பின் எதிரொலியாக துருக்கியிலும் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி டிரம்பிற்கு எதிரான தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.