SuperTopAds

டிரம்ப்-கிம் சந்திப்பு ஒட்டுக் கேட்கப்பட்டது: வெடித்தது புரளி!

ஆசிரியர் - Editor II
டிரம்ப்-கிம் சந்திப்பு ஒட்டுக் கேட்கப்பட்டது: வெடித்தது புரளி!

டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்ற போது உளவு கருவிகளை வைத்து அது ஒட்டுக்கேட்கப்பட்டதாக சிங்கப்பூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இதனை சிங்கப்பூர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்- கிம் சந்திப்பு கடந்த 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதற்காக சிங்கப்பூருக்கு சுமார் ரூ.81 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஹோட்டலில் உளவு கருவி மூலம் சிங்கப்பூர் அரசு ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு வைரலாக சுற்றி வருகிறது.

இந்த வதந்தியை நிரூபிக்க இதுவரை ஆதாரங்கள் ஏதும் வெளியாகாத நிலை உள்ளது.

செய்தி சேகரிக்க வந்த நிருபர்களுக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் ஒரு கிஃப்ட் கொடுக்கப்பட்டது

அதில் பேனா, நோட் பேட், வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு யூஎஸ்பி மின்விசிறி இருந்தது.

அது மிக சிறிய அளவிலானது. யூஎஸ்பி வயரை, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரிலுள்ள USB port பகுதியில் பொருத்தினால், அந்த ஃபேன் சுழலும். நிருபர்கள் வசதிக்காக இவற்றை சிங்கப்பூர் அரசு கொடுத்திருந்தது.

ஆனால், அந்த யூஎஸ்பி சீனாவில் தயாரிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது,

பேனில் உளவு கருவி இருந்ததாகவும், லேப்டாப் கேமரா, மைக்ரோபோனை அது தானாகவே ஆன் செய்து தகவல்களை வெளியே கசிய விடும் எனவும் பிரான்ஸ் நாட்டு அரசு ரேடியோ ஒலிபரப்பு ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த தகவலினை சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்தோசா வளர்ச்சி கழகம், யூஎஸ்பி ஃபேன்களை கிஃப்ட்டாக நிருபர்களுக்கு வழங்கியது.

கிம்-ட்ரம்ப் சந்திப்பு உறுதியாகும் முன்பே இந்த ஃபேன்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. எந்த சுற்றுலா பயணி செந்தோசா வந்தாலும் அவர்களுக்கு யூஎஸ்பி ஃபேன்கள் கிஃப்ட்டாக வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை.

இத்தீவில் சற்று வெப்ப சூழல் நிலவுவது வழக்கம். இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பு நடந்தபோது, தட்பவெப்பம் 33 டிகிரி செல்சியசையொட்டி இருந்தது. எனவே ஃபேன்களை வழங்கியிருந்தோம்.

இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.