பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட்டி விற்பனை, உணவகத்திற்கு தண்டம்! மீள திறக்கவும் அனுமதி...
யாழ்.ஆனைப்பந்தி பகுதியில் உள்ள அசைவ உணவகத்தில் பழுதடைந்த இறைச்சியை பயன்படுத்தி கொத்து ரொட்டி விற்பனை செய்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்தது.
பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பு.ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.
இன்றையதினம் 26.05.2023 வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000/= தண்டம் விதித்து.
அத்துடன் கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.