யாழ்.ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர்கள் ஆளுநருக்கு கடிதம்! பெற்றோர், மாணவர்கள் சண்டித்தனம் தொடர் கதையா?

ஆசிரியர் - Editor I
யாழ்.ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர்கள் ஆளுநருக்கு கடிதம்! பெற்றோர், மாணவர்கள் சண்டித்தனம் தொடர் கதையா?

யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த கல்லூரி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் குறித்த பாடசாலையில் மாணவனொருவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், யா/ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாகிய நாம் தினம் தினம் இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

24.05.2023 அன்று யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரியால் பயிற்சிக்காக வந்த ஆசிரியர் மீது தரம் 11 மாணவர்கள் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளனர்.

இது இரண்டாவது சம்பவமாகும். இவ்வாறு தொடர்ந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுவதனால் இப் பாடசாலையில் கடமையாற்றுவது அச்சுறுத்தலாகவே உள்ளது.

எனவே எமக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு

இடமாற்றம் பெற்றுத் தராவிடின், உடல் ரீதியாக பாதிக்கப்படும் பட்சத்தில் நீங்களே பொறுப்புக் கூறுபவர்களாக கருதப்படுவீர்கள் - என்றுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுக்கும் குறித்த கடிதத்தின் பிரதி அனுப்பபட்டுள்ளது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு