SuperTopAds

வடமாகாண பதில் சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள பெறுவதற்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் பிரயத்தனம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாண பதில் சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள பெறுவதற்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் பிரயத்தனம்...

மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தியின் நியமனத்தை மீளப் பெறுதுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரயத்தனம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக  மத்திய அமைச்சின் பரிபாலகத்திற்குள் உள்ள வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி மாகாண சபையின் கீழ் செயல்படும் நிறுவனத்துக்கு பதில் சுகாதார பணிப்பாளராக நேற்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

இவரது நியமனம் முறையற்றது என பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில்  வடமாகாண ஆளுநருக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் புதிய வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்ற நிலையில் வைத்தியர் தாங்கமுத்து சத்தியமூர்த்தியின் நியமனம் ஆரம்பமே தலை இடியாக மாறியுள்ளது.

வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவரஜா, ஆகியோர் மாகாண பதில்  சுகாதாரப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில்  ஆளுநர் சாள்ஸ் சுகாதார அமைச்சின் செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புதிய பதில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.