தனியார் கல்வி நிலையத்தின் பரீட்சை வினாத்தாள் யாழ்.வலய பாடசாலைகளில் நடந்த பரீட்சையில்!!! ஏன்? எப்படி? எதற்கு? எவர்? மாகாண கல்வி அதிகாரிகள் பதிலளிப்பரா??

ஆசிரியர் - Editor I
தனியார் கல்வி நிலையத்தின் பரீட்சை வினாத்தாள் யாழ்.வலய பாடசாலைகளில் நடந்த பரீட்சையில்!!! ஏன்? எப்படி? எதற்கு? எவர்? மாகாண கல்வி அதிகாரிகள் பதிலளிப்பரா??

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆங்கில மொழி மூல விஞ்ஞான பரீட்சைக்கான வினாத்தாள் தனியார் கல்வி நிலையம் ஒன்றினுடையது என்பது அம்பலமாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூல விஞ்ஞான பாட பரீட்சை நடத்தப்பட்டிருக்கின்றது. 

இதற்காக பயன்படுத்திய வினாத்தர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு பரீட்சைகள் நடத்தப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ள நிலையில், 

தனியார் கல்வி நிலையங்களை கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கிறார்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பியிருப்பதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை ஈர்ப்பதற்கான ஆசிரியர்களின் உத்தியா இது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் இவ்வாறான ஒரு வினாத்தாளை தயாரித்தவர் யார்? அது பாடசாலை பரீட்சைக்கு எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது? போன்ற தகவல்கள் வழக்கம்போல் கல்வி அதிகாரிகளால் இருட்டடிப்பு செய்யப்படும் என சாடியுள்ள பெற்றோர். 

மாகாண கல்வி திணைக்களம் உறக்கத்திலிருந்து எழுந்து இவ்வாறான விடயங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், அனைவருக்கும் சமமானது என்ற இலவச கல்வியை சீர்குலைப்பது சட்டவிரோதம் எனவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு