யாழ்.வலி,வடக்கு - வசாவிளானில் பொதுமக்களுடைய காணியில் இராணுவ வைத்தியசாலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு - வசாவிளானில் பொதுமக்களுடைய காணியில் இராணுவ வைத்தியசாலை..

யாழ்.வலி,வடக்கு - வசாவிளான் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்படுவருவதாகவும், அதற்காக எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை எனவும் வலி,வடக்கு முன்னாள் உறுப்பினர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில் கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது. இதில் 8 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களின் காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறியிருந்தேன் கடந்த ஒருவருடமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பிரதேச சபையால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாது இருந்துள்ளது. 

தற்போது தையிட்டி விகாரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள் அதேபோல் வசாவிளான் பகுதியில் அமைக்கப்படுகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

வலிவடக்கு பிரதேசத்தை பொறுத்தவரையில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து சிறிது சிறிதாக விடுவிக்கப்படும் பகுதியாகவே காணப்படுகிறது. தற்போதும் பல பிரதேசங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது விடுக்கப்படும் என கூறப்பட்டுவந்தாலும் அது நடந்தபாடாக இல்லை.

எனவே இனியாவது காணிகளை விடுவிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் அனுமதியின்றியும் பொதுமக்களின் காணிகளில் கட்டப்பட்டு வருகின்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் 

ன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு