எத்தியோப்பியாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு: ஏராளமானோர் பலி?
எத்தியோப்பியாவில் புதிய பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் புதிய பிரதமராக அபிய் அகமத் கடந்த ஏப்ரல் மாதம் பதிவியேற்றிருந்தார். இவருடைய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரதமர் அபிய் , விடைபெறுவதாக கூறி கையசைத்து விட்டு கிளம்புகையில், திடீரென மக்கள் கூட்டத்திலிருந்து பயங்கரமான சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது
இதனால் பதறிப்போன பொதுமக்கள் செய்வதறியாது, உயிர்பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர்
இதற்கிடையில் பத்திரமாக மீட்கப்பட்ட பிரதமர் அபிய், தாக்குதல் குறித்து தொலைக்காட்சி ஒன்றின் வாயிலாக பேசியுள்ளார். அதில், எத்தொயோப்பியா மக்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிலர் சதித்திட்டம் தீட்டி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 83 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை குறித்து இதுவரை எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், ஏராளமானோர் பலியாகியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட்கும் பணியில் அவசர ஊர்திகள் குவிக்கப்பட்டு, மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.