‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’ - ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த டைம்ஸ் இதழ்
மெக்சிகோ அகதிகளின் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்,அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனைத் தொடர்ந்து கடந்த 6 வாரங்களில் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெற்றோர் கைது செய்யப்பட்டு ஓரிடத்திலும் குழந்தைகள் பல்வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்டனர். அப்போது பெற்றோரை இழந்த குழந்தையின் வேதனையை புலிட்சர் விருது பெற்ற ஜான் மூர் என்ற தனது கேமராவில் பதிவுச் செய்திருந்தார். அந்த புகைப்படம் ட்ரம்புக்கு எதிராக பெரும் எதிர்பலையை ஏற்படுத்தியது. எல்லைப் பிரச்சினையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சகிப்புத் தன்மையற்ற செயலை இது காட்டுகிறது என்று பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் டைம்ஸ் இதழ் ஜான் மூர்ரின் புகைப்படத்தை பதிவிட்டு, அமெரிக்கவுக்கு வாருங்கள். என்று அட்டைப் படத்தை வெளியிட்டு அகதிகளின் மீதான ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறது.
அகிதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது மிகக் கொடுமையான செயல் என்று அதிபர் டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து எல்லைகளின் வழியே சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை டெனால்ட் டிரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.