SuperTopAds

பொலிஸ் சுற்றிவளைப்பில் சிக்கிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 15 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை!!!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சுற்றிவளைப்பில் சிக்கிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 15 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை!!!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியிருந்த இடத்தில் போதைப் பொருள் மீட்க்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக அங்கிருந்த 15 மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களா? என்பதை கண்டறிய யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பபட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள தங்கும் விடுதியில் உயிர் கொல்லி போதை மாத்திரைகள், போதைப் பொருட்கள் பாவிப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. 

இந்நிலையில் விடுதியை சுற்றிவளைத்த பொலிசார் விடுதியை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் உயிர் கொல்லி போதை மாத்திரைகள், போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். 

மேலும் அவர்கள் தங்கி இருந்த விடுதியில் உயிர் கொல்லி போதை மாத்திரைகளின் வெற்று காட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் தெரியப்படுத்திய நிலையில் 

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்கள் போதை மாத்திரை பாவித்தமை உறுதி செய்யப்பட்டால் பொலிசார் மேற்கொள்ளும் எந்த ஒரு சட்ட நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.