SuperTopAds

நாள்தோறும் 2 மணிநேரம் இணையதள சேவை இருக்காது- இது எங்கே ? ஏன் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
நாள்தோறும் 2 மணிநேரம் இணையதள சேவை இருக்காது- இது எங்கே ? ஏன் தெரியுமா?

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அல்ஜீரியா நாட்டில் பரீட்சையில் காப்பி அடிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டதால் இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் பரீட்சை நடைபெறும் 2 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இங்கு பள்ளி இறுதித்தேர்வில் பரீட்சை நடக்கும் போது, முன்கூட்டியே வினாத்தாள் இணைய தளங்களில் வெளியானதுடன் சமூகவலை தளங்களில் விடைகளை உடனடியாக அனுப்பினார்கள்.

இவற்றை பள்ளியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் செல்போன்களை மறைத்து எடுத்து சென்று அதை பயன்படுத்தி தேர்வு எழுதினார்கள்.

இதனை தடுப்பதற்கு முயன்றும் பலனளிக்கவில்லை. இந்தநிலையில் நேற்று உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு நாளும் பரீட்சை நடைபெறும் 2 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் இணையதள சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 5 நாட்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் முடக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.