மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமைக்கு என்ன காரணம்?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தமை சர்வதேச மட்டத்தில் தற்பொழுது பேசுபொருளாகியுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பதே கவனிக்கப்படவேண்டியதாகும்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை பல மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாமலும் விட்டுள்ளது என்ற பிரதான குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்த உறுப்புரிமை கொண்ட நாடுகளாக காணப்படுகின்றன.
இந்த நிலையில், குறித்த சபையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
பாதுகாப்புப் பேரவை கடந்த சில வருடங்களில் அலட்சியமாக செயற்பட்டதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா மாறியுள்ளதாகவும் அவர் விமர்சினத்தினை முன்வைத்துள்ளார்.
அத்தடன், கொங்கோவில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், அந்நாட்டுக்கு உறுப்பினராக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வெனிசூலா மற்றும் ஈரானில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து பொறுப்புடன் அறிக்கையிட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தவறியுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் பாதுகாப்பு பேரவையிலிருந்து வெளியெறும் முடிவை அமெரிக்கா வெளியிட்டுள்ளதுடன், மனித உரிமை பேரவையிலிருந்து விலகியபோதிலும், மனித உரிமை விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுமென்பதை தௌிவாக சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.