யாழ்.தெல்லிப்பழை - புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 90 லட்சம் செலவில் ஒட்சிசன் தொகுதி! இன்று கையளிப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 90 லட்சம் செலவில் ஒட்சிசன் தொகுதி! இன்று கையளிப்பு...

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒட்சிசன் தொகுதி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட உள்ளது.

லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் வைத்திய கலாநிதி அநோமா விஜயசிங்கவும்,

சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச பணிப்பாளர் சுனில் வட்டவலவும் கலந்துகொள்ள உள்ளனர்.2 021 -2022 ஆம் ஆண்டுக்கான லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமாரின் பெருமுயற்சியால் 

லயன்ஸ் கழக பெண்கள் அணியினரின் தலைவியாகிய லயன் மரியன் ராஜ்குமாரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோயாளர்களுக்கு ஒட்சிசன் தொகுதி ஒன்றை அமைத்து வழங்கவேண்டும் என்ற பெருநோக்கோடு 

அனைத்து லயன்ஸ் கழக உறுப்பினர்களிடமிருந்தும் சர்வதேச லயன்ஸ் கழகத்திடமிருந்தும் பெறப்பட்ட நிதியிலேயே இந்த ஒட்சிசன் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதி இன்று(வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் றெமான்ஸிடம் கையளிக்கப்பட உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு