வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தரப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்கும்படி ஆளுநர் பணிப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தரப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்கும்படி ஆளுநர் பணிப்பு!

வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், மாகாண மக்கள் அருந்தும் நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன். வடமாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச்சபை 

வடக்கு மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும். அதுமட்டுமல்லாது பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் அறிக்கை தருமாறு 

செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். அதுமட்டுமல்லாது வழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ் செயல்படும் 

அனைத்து நிறுவனங்களும் 13 வாரத்துக்கு ஒரு தடவை குடிநீரின் தர நிர்ணயம் தொடர்பில் அறிக்கை வழங்க வேண்டும்.அது மட்டுமல்லாது வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள் 

பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்.குறித்த செயற்பாட்டினை வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், 

மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு