விண்வெளியில் அசரீரீயாக ஒலிக்கபோகிறது ஹாக்கின்ஸின் குரல்...
வாஷிங்டன் : இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்சை கவுரவிக்கும் பொருட்டு, அவரது குரலை, விண்வெளியில் அசரீரியாக ஒலிக்கச் செயவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானியாக விளங்கியவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். இவரது கொள்கைகள், கருத்துக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படாதவையாக இருந்தாலும், யாராலும் மறுக்கமுடியாதவை. அரியவகை நியூரான் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஹாக்கின்ஸ், பல்லாண்டு காலமாக சிறப்பு சிகிச்சையிலேயே இருந்து வந்துள்ளார்.
ஹாக்கின்ஸ், தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி மரணமடைந்தார். இவரது உடல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில், சார்லஸ் டார்வின் மற்றும் ஐசக் நியூட்டன் கல்லறைகளுக்கு நடுவில் புதைக்கப்பட்டுள்ளது.