மானா? மீனா? அல்லது வேறா? 4 மணித்தியாலங்கள் கடந்தும் தொடரும் புதிய கூட்டணிக்கான பேச்சு..

ஆசிரியர் - Editor I
மானா? மீனா? அல்லது வேறா? 4 மணித்தியாலங்கள் கடந்தும் தொடரும் புதிய கூட்டணிக்கான பேச்சு..

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல் 4 மணித்தியாலம் தாண்டி தொடர்ந்துவருகிறது. 

தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

எனினும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று காலை மீண்டும் யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று காலை தொடக்கம் கூட்டணிக்கான பொது சின்னம் ஒன்றை தேர்வு செய்தல், உடன்பாட்டில் கையொப்பமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.

எனினும் 4 மணித்தியாலங்கள் கடந்து மதிய உணவின் பின்னரும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு