யாழ்.மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் காணியில் சர்வதேச விளையாட்டு மைதானம்! பணிகள் மிக விரைவில் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் காணியில் சர்வதேச விளையாட்டு மைதானம்! பணிகள் மிக விரைவில் ஆரம்பம்..

யாழ்.மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை கட்டும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குதல் தொடர்பில் பேசப்பட்டது. 

இதன்போது யாழ்.மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

தானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு